Varahee Kavacham || வாராஹி கவசம் - Saradha Raaghav

Описание к видео Varahee Kavacham || வாராஹி கவசம் - Saradha Raaghav

முழுமுதற் கடவுளே மூஷிக வாஹனனே
முன்வந்து காப்பவனே மூலாதாரனே விநாயகனே
வாராஹி கவசத்தை உனதருளால் நான் பாட
உன்னத வாழ்வு தந்து உடனிருந்தே காத்தருள்வாய்.
வாராஹி சரணம், வார்த்தாளி சரணம்,
வராஹ முகம் கொண்டு வையகம் காக்க வந்தவளே சரணம்.
ஓம்காரி சரணம், ஹ்ரீம்காரி சரணம்,
சரணம் சரணம் வாராஹி தாயே சரணம்.
நவகோண சக்கரத்தில் நின்று நானிலம் காக்க வந்தவளே
மஹா வாராஹியே சரணம் சரணம் அம்மா.
பஞ்சமி நாயகியாய் பிரபஞ்சம் ஆள வந்தவளே
தஞ்சம் உந்தன் மலரடியே சரணம் சரணம் அம்மா.
மஹா வாராஹியே ஸ்வப்ன வாராஹியே ஆதி வாராஹியே
லகு வாராஹியே வா வா வா.
சிம்ஹா ரூடா வாராஹியே, மகிஷா ரூடா வாராஹியே,
அஷ்வா ரூடா வாராஹியே, உன்மத்த வாராஹியே வா வா வா
அஷ்ட வாராஹியே என் இஷ்ட வாராஹியே
துஷ்ட நிக்ரஹம் செய்ய வாராஹியே வா வா வா.
சண்ட ப்ரசண்ட வடிவான சிவசக்தி வாராஹியே
கிரி சக்ர ரதமேறி காத்தருள வா வா வா.
மஹா மேருவில் வீற்றிருக்கும் மஹா வாராஹி தாயே
மகிமைகள் புரிய மஹா சக்தியே, மஹா மஹா ரௌத்ரியே வா வா வா.
திருமாலின் அவதார அம்சமாய் வராஹ முகம் கொண்டாள் வாராஹி.
த்ரீலோகேஷன் அம்சமாய் த்ரிநேத்திரங்கள் கொண்டாள் வாராஹி.
இரவில் பூதை ஏற்று இன்னல்களை களை வாள் வாராஹி.
எட்டு பஞ்சமி நாளில் பூஜை ஏற்று எண்ணியதை முடிப்பாள் வாராஹி.
தேய்பிறை பஞ்சமி பூஜையில் வளர்பிறையாய் வாழ்வளிப்பாள் வாராஹி.
தேனில் ஊறிய மாதுளை ஏற்று தனமழை பொழிவாள் வாராஹி.
ஐம் க்லேளம் எனும் மூல மந்திரத்தில் ஐஸ்வர்யங்கள் அருள்வாள் வாராஹி.
நித்தம் இதனை ஜெபித்து வர சகல சித்திகளும் தருவாள் வாராஹி.
ஞானத்துள் சிறந்த சிவஞானத்தை அருள்வாள் வாராஹி.
ஞாலம் போற்றும் கீர்த்தியும் செல்வாக்கும் அருள்வாள் வாராஹி.
விரளி மஞ்சள் மாலை சாற்ற வேண்டியதை தந்து அருள்வாள் வாராஹி.
செவ்வரளி மலர் அர்ச்சனையில் அள்ளிவளம் பொழிந்தருள்வாள் வாராஹி.
செண்பக மலர் பூஜை ஏற்று கண் மலர்ந்தே காத்தருள்வாள் வாராஹி.
மரிக்கொழுந்தில் மனம் மகிழ்ந்து மகிமைகள் புரிந்து அருள்வாள் வாராஹி.
தேங்காயில் நெய்தீபம் ஏற்ற தீங்கினை தகர்த்தெரிவாள் வாராஹி.
லலிதா நவரத்தின மாலையில் குளிர்ந்த நவநிதியை தந்தருள்வாள் வாராஹி
வாராஹி மாலை பாடிட மகிழ்ந்து வாழ்வில் வெற்றிகளை தந்தருள்வாள் வாராஹி.
ஜெயம் தரும் வாராஹி ஜெகம் புகழ் வாராஹி சரணம்
உன் மலரடியே சரணம் சரணம் அம்மா.
கோடி சூரிய பிரகாஷ ஒளியாய் நெற்றிக்கண் கொண்டவள் வாராஹி.
கோலோடு வாதாடி குறை தீர்ப்பவளே வாராஹி.
அகிலாண்டேஸ்வரி அருள் உருவாய் ஆனவள் வாராஹி.
அபராஜிதா மீதேறி அண்டம் அதிர வந்தவள் வாராஹி.
போர்கோல தேவதையாய் படை தளபதி ஆனவள் வாராஹி.
பைரவ பத்தினியாய் படை நடுங்க செய்தவள் வாராஹி.
கோரப் பல்லும் கூர் நகங்களும் கொண்டவள் வாராஹி.
கருத்த ஆடை அணிந்து கோபக் கனலாய் காட்சி தருபவள் வாராஹி.
அஹங்காரியாய் ஆவேசமாய் அசுரரை மாய்த்து சாய்த்தவள் வாராஹி.
அன்னையாய் அன்புருவாய் என்றும் தன் அடியவரை காத்து ரக்ஷிப்பாள் வாராஹி.
பராசக்தியின் வடிவம் என புராணங்கள் போ ற்றிடும் வாராஹி.
பெயர்கள் பன்னிரெண்டு கொண்டு புவி ஆள வந்தவளே வாராஹி.
பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரீ,
ஸமயஸங்கேதா, வாராஹி, போத்ரிணீ , சிவா,
வார்த்தாளி, மஹாசேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்நீ
எனும் 12 நாமங்கள் கொண்டவளே வாராஹி.
நாளும் இதனை ஓதி துதித்தால் நலம் யாவும் தந்தருள்வாள் வாராஹி.
அன்னையின் அருள் பார்வையில் அகிலத்தையை நம்வசம்
ஆக்கிடுவாள் வாராஹி.
மந்திர சாஸ்திரத்தின் மஹாராணியே வாராஹி
மங்கை காளி வாராஹிளய
மங்கள வாழ்வு தந்தருள்வாள் வாராஹி.
மண் செழிக்க விண்நின்று வாராஹியே வந்துதித்தாள்.
நீர் செழிக்க நிலம் செழிக்க மழை பொழிய வைத்திடுவாள்.
மழை பொழிய மண் செழிக்க பயிர்கள் விளைய செய்திடுவாள்.
பயிர் விளைந்து வயிற் நிறைந்து பசி பிணியை போக்கிடுவாள்.
பசி பிணியை போக்கி அவள் உய்ய வழி காட்டிடுவாள்.
உய்ய வழி காட்டி அவள் உயர்வுகளை தந்தருள்வாள்.
உயர்வுகளை தந்து அவள் சுகபோக வாழ்வளிப்பாள்.
வீடு மனை சொத்து சுகம் யாவும் பெற செய்திடுவாள்.
வாராஹியே சரணடைந்தால் வளம் யாவும் பெற்றிடலாம்.
வாராஹி தாயே உன் மலரடியே சரணம் சரணம் அம்மா.
கண் திருஷ்டி தோஷம் யாவும் கணத்தில் ஓடிட செய்வாள் வாராஹி.
ஏவல் பில்லி சூனியம் ஏவியவரிடமே ஏவி விடுவாள் வாராஹி.
தீராத கடன் தொல்லை தீர்த்திடுவாள் வாராஹி.
மாறாத பிணிகள் யாவும் மறைத்தோட செய்வாள் வாராஹி.
கரும வினைகள் யாவும் கலைந்திடுவாள் வாராஹி.
வறுமை என்ற சொல்லை வளமை ஆக்கிடுவாள் வாராஹி.
வாராஹி பக்தரிடம் வாதாடாதே என்பர், வாய்மையும் வல்லமையும்
தந்து வழக்கில் வென்றிட செய்வாள் வாராஹி.
விண்ணதிர மண் அதிர வந்துதித்தாள் உக்ரகியாய்
தன்மதியாய் உளம்குளிர்ந்து காத்தருள்வாள் தயாபரியாய் வாராஹி.
சரணம் சரணம் பஞ்சமி நாயகியை சரணம் பைரவ பத்தினியே சரணம்
சேனா நாயகியை சரணம் ஜெகத் ஜோதி ஆனவளே சரணம்.
சரணம் சரணம் உக்ரஹமானவளே சரணம் உயர் பதவிகள் அருள்பவளே சரணம்
அஞ்சுதல் களைபவளே சரணம் அஞ்சாமை அருள்பவளே சரணம்.
சரணம் சரணம் சுகபோகம் தருபவளே சரணம் நவயோகம் அருள்பவளே சரணம்
குலம் தழைக்க செய்பவளே சரணம் தனம் செழிக்க அருள்பவளே சரணம்.
சரணம் சரணம் ஜெகத் ரக்ஷகிளய சரணம் ஜெகம் போற்ற செய்பவளே
சரணம் வராஹ முகியே சரணம் ஜூவாலாமுகியே சரணம்.
ஓம்காரி சரணம், ஹ்ரீம்காரி சரணம், ஆங்காரி சரணம், சரணம் சரணம்.
வாராஹி சரணம், வார்த்தாளி சரணம், சரணம் சரணம் தாயை சரணம் அம்மா.
ஆதி வாராஹி போற்றி அனுக்கிரஹம் புரிவாய் போற்றி
அண்ட பேரண்டமே போற்றி ஆரோக்கியம் அளிப்பாய் போற்றி
பஞ்சமி நாயகியே போற்றி பிரபஞ்ச ஜோதியே போற்றி
பைரவ பத்தினியே போற்றி பக்த ரக்ஷகியே போற்றி
தண்டநாதையே போற்றி தேஜஸ்வினியே போற்றி
தாயாக வருவாயே போற்றி தனமழை பொழிவாயே போற்றி
ஸர்வ ஜனனீ போற்றி ஸர்வானந்தமயி போற்றி
ஸர்வ காரணி போற்றி ஸர்வரோக நாசினி போற்றி
எங்கும் நிறைந்தாய் போற்றி எதிலும் உறைவாய் போற்றி
எல்லாமும் ஆனாய் போற்றி எங்களை காப்பாய் வாராஹி தாயை போற்றி.
அஷ்ட புஜங்களை கொண்டவளாய் வீறுகொண்ட பார்வையுடன் அமர்ந்திருக்கும்
வாராஹியின் கவசமிதை கேட்டிட அவள் அருள் கிடைக்கும்.

Комментарии

Информация по комментариям в разработке