Parasakthi (1952) - Tamil Classical Movie Full (Feel Good) - பராசக்தி - முழுநீள தமிழ்த் திரைகாவியம்

Описание к видео Parasakthi (1952) - Tamil Classical Movie Full (Feel Good) - பராசக்தி - முழுநீள தமிழ்த் திரைகாவியம்

Parasakthi (1952) - Full Length Tamil Classical Movie - பராசக்தி - கலைஞரின் தெறிக்கும் வசனங்களுக்கு நடிகர் திலகம் உயிர் கொடுத்த முழுநீள தமிழ்த் திரைகாவியம்.

Parasakthi is a 1952 Tamil film. Wrote by Kalaignar Mu. Karunanidhi and directed by Krishnan-Panju. Satrred by Nadigar Thilagam Sivaji Ganesan, Bhandari Bhai, S. S. Rajendran, S. V. Sahasranamam, Sriranjani and others. For Sivaji Ganesan this is the debut film, who later became the most famous actor in Tamil Nadu. This is the film that introduced S. S. Rajendran also to the film industry. Parasakthi narrates the plight of a Tamil family during World War II.

பராசக்தி (Parasakthi) 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத, கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனை, எஸ். எஸ். ராஜேந்திரனை, திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது. பராசக்தி இரண்டாம் உலகப் போரின்போது ஒரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த அவலங்களை விவரிக்கிறது.

இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்பு: பி. ஏ. பெருமாள் முதலியார்
திரைக்கதை: மு. கருணாநிதி
வசனம்: மு. கருணாநிதி
இசை: ஆர். சுதர்சனம்
ஒளிப்பதிவு: எஸ். மாருதி ராவ்
படத்தொகுப்பு: பஞ்சாபி
கலையகம் (Studio): ஏவிஎம் மற்றும் நேஷனல் பிக்சர்ஸ்
விநியோகம்: நேஷனல் பிக்சர்ஸ்
வெளியீடு: அக்டோபர் 17, 1952

நடிகர்கள்:

குணசேகரனாக சிவாஜி கணேசன்
சந்திரசேகரனாக எஸ். வி. சகஸ்ரநாமம்
ஞானசேகரனாக எஸ். எஸ். ராஜேந்திரன்
மாணிக்கம் பிள்ளையாக துரைசாமி
வேணுவாக டி. கே. இராமச்சந்திரன்
வெள்ளைசாமியாக கே. எம். நம்பிராஜன்
தங்கப்பனாக வெங்கடராமன்
நாராண பிள்ளையாக வி. கே. ராமசாமி
பூசாரியாக கே. பி. காமாட்சி
குப்பனாக எம். என். கிருஷ்ணன்
வேலைகாகாரனாக சக்திவேல்
தம்பிதுரையாக டி. வி. நாராயணசாமி
தமிழ்ப் பண்டிதராக வி. கே. கார்த்திகேயன்
நீதிபதியாக கவிஞர் கண்ணதாசன்

நடிகைகள்:

கல்யாணியாக ஸ்ரீரஞ்சனி
விமளாவாக பண்டரிபாய்
சரசுவதியாக சுசீலா
ஜாலியாக கண்ணம்மா
பழம் விற்பவராக அங்கமுத்து
காந்தாவாக டி. பி. முத்துலட்சுமி
பார்வியாக ஏ. எஸ். ஜெயா

நடன மங்கைகள்:

குமாரி கமலா
டி. டி. குசலகுமாரி

மேலதிக விவரங்களுக்கு:

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%...)

திரைக்கதை சுருக்கம்:

தாயை இழந்து தந்தையுடன் மதுரையில் வாழ்ந்து வரும் கல்யாணிக்கு மூன்று அண்ணன்கள். அண்ணன்கள் அனைவரும் பர்மா எனப்பட்ட மியான்மரில் வணிகம் செய்து வந்தனர். 1940களில் மூண்ட உலகப் போர் சூழலில் தங்கைக்கு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. போரினால், கதையின் நாயகனான கல்யாணியின் கடைசி அண்ணன் குணசேகரனுக்கு மட்டும் கப்பலில் பயணச்சீட்டு கிடைக்கப்பெற்று, அன்றைய மதராசான சென்னைக்கு வருகிறான். சென்னையில் தான் கொண்டு வந்த அனைத்தும் ஒரு வஞ்சகியின் சூழ்ச்சியினால் இழந்து, மதுரைக்கும் செல்ல வழியின்றி, பசியினால் சமூக அவலங்களைச் சந்திக்கிறான். இவ்வேளையில் கல்யாணம் நிறைவுற்று, பின் மகிழ்வாய் குழந்தை பெற்ற அன்றே விபத்தால் கணவனும் பாலகன் பிறந்த நன்நிகழ்வைக் கூற வந்தபோது விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சியில் தந்தையும் இறக்க, கடன் பொருட்டு வீடும் இழந்து, கைம்பெண்கள் சந்தித்தத் துயரத்தை கல்யாணி எதிர்கொள்கிறாள். பின் என்ன நிகழ்கிறது என்பது மீதி கதை.

#DailyGoodNews #trending #dailygoodnews #goodnews #parasakthi #tamil #sivaji #sivajiganesan #tamilcinema #tamilmovie #tamilmovies #fulllengthtamilmovies #classic #classical #classicaltamilmovies #evergreen #evergreenhits #evergreenmovies #tamilevergreenmovies #tamilevergreenhits #feelgood #feelgoodmovies #feelgoodmovie

Please subscribe to our channel. Also please like, share and comment.

Комментарии

Информация по комментариям в разработке